Posts

Showing posts with the label சிரிப்பு

நிலவு சரக்கடிக்க சைட்டீஸ் கேட்கிறது..!

Image
நிலவு சரக்கடிக்க சைட்டீஸ் வேண்டுமாம் கைநீட்டுகிறது ஜன்னல் வழியே அதுதான் காதலை கவிதையாய் பொரித்து கொண்டிருக்கிறேன்..! **** அழகே உனை ஆராதிக்க நேரமில்லை முடியுமானால் இன்று என்கனவில் வந்துவிடு #வேலைக்குபோகிறேன். **** விடுதலை வேண்டி வேண்டுமென்றே தவம புரிகின்ற கண்களுக்கு மீண்டும் உனை காண்பேனென்று எப்படி சொல்வேன்...! **** இனி குடிக்கமாட்டேன் என்பவனை நம்பலாம் ஆனால் இனி கிரிக்கெட் மேட்சு பாக்கமட்டேன் என்பனை நம்ப முடியாது.. #அவதானிப்பு + கடுப்பு. **** உன் கால்செருப்பு என்கன்னத்தை முத்தமிட்டபோதுகூட கலங்கியதில்லை நான், இன்று உன் நாய்க்குட்டியின் ஆத்மாக்காய் ஒப்பாரிவைக்கிறேன் #நாய்க்காதல் **** சிறு காய்ச்சல் வந்து சொல்லிவிட்டு போகிறது அன்னை அருகில் இல்லை என்ற பெரிய குறையை...! **** எட்டமுடியா உச்சம் நீ... வானை வட்டமிடும் நிலவு நீ... எனை திட்டமிட்டு கொத்திச்செல்லும் காதல் கழுகும் நீ...! **** காதல் காய்ச்சல் கசக்கிறது வாழ்க்கை உன்விழியால் கொஞ்சம் புளிப்பார்வை பாரேன்....! **** பப்பரப்பே என நீ விரித்துப்போட்ட உன் கூந்தலுக்குள் சிக்கிச்சீரழிகிறது என் பார்வைகள்...! **** யாருமில்லா டைம்லைனில் என் கீச்சுக்...

முருங்கைக்காய் பார்த்தால் திருமண ஆசை வருகிறதா...? - வேச்சுலர்

Image
புதருக்குள் நெளியும் புடையன் பாம்பாய்... உன் புருவம் கண்டவுடன் என் இதயம் மனதிற்குள்...!!! **** என்ன சொல்கிறாய் ஏன் மெல்கிறாய் எதற்காய் கொல்கிறாய்...?..!!! **** கடற்கரையில் காதல் பொதிசெய்த காமச்சோறு உண்கிறார்கள் இருவரும் மாறிமாறி #galleface #merina **** சந்தையில் முருங்கைக்காய் திருமணத்தை நினைவுபடுத்துகிறது #வேச்சுலர் **** பில்லி சூனியம் ஏவல் ஒன்று சேர்ந்த காதல் என்னோடு இப்போ மோதல்...:( **** விளம்பரம் :- "நன்றியுள்ள நாய்கள் விற்பனைக்கு உண்டு, யாராவது மனிதர்கள் இருந்தால் அவர்களுக்கு இலவசம்" **** குடிக்க வாட்டர் இல்லாக் காலங்களிலும் மேட்டரே இல்லாமல் குவாட்டர் கொடுப்பவன்தான் நண்பன்...! #குடிமொழி **** இன்று எழுந்தவுடன் ராசிபலன் பார்த்தேன் கிழக்குத்திசை போகவேண்டாம் என இருந்தது. அடங்கொய்யாலே வாத்ரூம் அந்த திசையில்தானே இருக்கு..! **** இன்று பார்த்த கோடூர காட்சி "ஒருத்தர் பருப்பு வடைய டீயில் தொட்டு சாப்பிட்டது" **** "BATTLESHIP" படம் பார்த்தேன் இட்ஸ் அமேசிங் அட்வென்சர் ஆக்சன் பிலிம் அமெரிக்க பெருமை சொல்லும் படமும் கூட பாருங்கள் ரசிக்கலாம்..! **** போறவளே பொண்ணுதாயி ...

பல்லு இருக்கிறவங்க எல்லோரும் பவர்ஸ்டார் ஆக முடியாது..!

Image
பல்லு இல்லாதவங்க எல்லாம் பக்கோடா சாப்பிட முடியாது... பல்லு இருக்கிறவங்க எல்லாம் பவர்ஸ்டார் ஆக முடியாது..! கண்ணீர் துடைக்கும் கைகளுக்கு தங்கஆபரணங்கள் தேவையில்லை , அவை என்றும் மதிக்கப்பட வேண்டியவைதான்...! **** பூங்காற்று திரும்புமா பாடல் கேட்கிறேன் பாலைவனப் புளுதிக்காற்றில் நின்றபடி...! **** மொக்கைகள் முட்டிமோதும் டுவிட்டரில் எட்டியிருந்து புதினம் பார்கிறேன் என்றாவது நானும் வித்தை காட்டலாம் என்றபடி....! **** டுவிட்ஸ் பூக்கள் பூக்கும் டுவிட்டர் தோட்டத்தில் அலுவலக ஆணிகள் ஆடுகளாய் அனைத்தையும் நாசப்படுத்துகின்றன.....:( **** முணுமுணுத்த நாய்க்கு முத்த பிஸ்கட் கொடுத்துவிட்டு ஓட்டின்மீது ஏறி ஒழுகிய மழையாய் உள்நுழைந்தேன் - களவானி **** கண்ணுக்குள் நூறு நிலவு வேண்டாம் ஒரு நிலவுக்கே இழவு போகுதே...:( **** ஏதேனும் நுளம்பு வந்து உன் தூக்கம் கலைக்கிறதா.. அது என் கவிதை படித்துவிட்டு வந்திருக்கிறது போலும்...! **** தூக்கமாத்திரை போட்டும் துயில முடியவில்லை உன் துப்பட்டாவில் சிக்கித்தவிக்கும் என் நினைவுகளால்..! **** நிலவு வந்து கேட்டால் நான் இல்லையென்று சொல்லுங்கள்.... ஒரே ...

ஐ.பி.எல் போட்டியும் ஆபாச ஆட்டமும்...!

Image
பட்டப்பகலில் மொட்டைமாடியில் வட்டநிலா... காயப்போட்ட உன் துப்பட்டா திருடுவதற்காய்...! **** வேலை நாட்களில் வருகின்ற தூக்கம் விடுமுறை நாட்களில் எங்கே செல்கிறதோ தெரியல ஒரு ஆணிகூட இல்ல அலுப்பாக உள்ளது...! **** ஒன்றுமட்டும் நன்றாக புரிகிறது மேற்குஇந்தியாவில் முண்டா பணியன் நல்ல மலிவு போல.. #AusvWI **** சின்னஞ்சிறு வயதில் ஏதோ கிறுக்கியிருந்தேன்... அதை இப்போது மொழிபெயர்த்தேன் "நான் உருப்படவே மாட்டேன்" என்று இருந்தது... சோ சாட் :(( **** மரத்த வச்சவன் மட்டுமில்ல மதுவ வச்சவனும் தண்ணி ஊத்துவான்...:! கன்னமேனும் உண்டியலில் கண்ணீர் சேமிக்கிறேன் காதலில் அதிகம் சில்லறை வலிகள் வரும் என்பதனால்...! **** ஐ.பி.எல் இல் அடித்தாடும் வேகத்தைப்போல அவிழ்தாடும் வேகமும் அதிகமாத்தான் இருந்தது.....! **** வெண்ணிறாடை மூர்த்தியாய் உதடு ரெண்டும் ம்ம்ப்புறும் இசைக்கின்றது அன்பே உன் அழகுச்சாயம் பார்த்தவுடன்...! **** மிட்டாய் தொலைத்த சிறுவனாய் அழுகிறது கைபேசி அன்பே உன் அழைப்பின்றி போனதால்...:(( **** நீ அவரவிட அவ்வளவு அழகு... "ஹேய் எண்ணங்க சத்தம்.. ?" ஒண்ணுமில்லைங்க குளிக்...

மழைதுளியிலும் கண்காணிப்பு கேமரா..!!!

இலங்கையில இனப்பிரச்சனை இந்தியாவில சாதிப்பிரச்சினை இருநாட்டு அரசியல்வாதிகளின் ஆயுளின் நகர்விற்காய்...! ✿✿✿✿✿✿✿✿ காலைநேர கனவுகளில் மட்டுமே பாலைவனங்கள் எங்களுக்கு சோலைவனங்கள்...! அதையும் குலைத்துவிடுகிறது சிலபேரின் குறும்செய்திகள்...! ✿✿✿✿✿✿✿✿ ஒவ்வொரு மழைதுளியிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் எப்படி இருக்கும்... ? ஹீ ஹீ # குறுக்குப்புத்தி. ✿✿✿✿✿✿✿✿ ஒருவேளை காதல் சுற்றுப்போட்டிகள் நடந்தால் அனைவரின் தலைக்கும் மாறிமாறி வரலாம் ஆரஞ்சு , பேர்பில் தொப்பிகள்..! ✿✿✿✿✿✿✿✿ ஏசிக்கும் எயாருக்கும் நடக்கும் யுத்தத்தில் குளிர்காய்கிறான் மனிதன்...! ✿✿✿✿✿✿✿✿ கடினபந்தை அடிப்பதற்கு டைமிங் நல்லா இருக்கணும் காலத்தை வெல்வதற்கு டைம் நல்லா இருக்கணும்...! ✿✿✿✿✿✿✿✿ நீ கிள்ளிச்சென்ற மல்லி மணம்வீசுதே உன்பெயார் சொல்லி...! ✿✿✿✿✿✿✿✿ எருமையின் மீதிலே எமன்வரும் நேரம் என்ன நேரம்.. ? யாராச்சும் தெரிந்தவர்கள் உண்டோ அறிந்தவர்கள் உண்டோ.. ? ✿✿✿✿✿✿✿✿ Who to follow இல் பில் கேட்ஸ் இருக்கிறார் ஃபாலோ பண்ண பயமா இருக்கிறது தெருவோர டீக் கடைக்காரனுக்கு தெரிந்தால் அசிங்கமா போய்விடும்..:...