கைபேசி காதலும்.. காதல் ரோஜாவும்....!

காதல் தந்தவனே
காத்திருப்பின்
சுகம் தந்தவனே
எங்கே சென்றாயடா...?
எனை விட்டுப் பிரிந்து...!!!
கண்ணீருடன்
காத்திருக்கிறேன்
கையில் கைபேசியுடன்....
நீ வந்து கட்டணம்
செலுத்தும்வரை.....!!!
++++++++++++++++++++++
இந்த ரோஜா
எனைப்பார்த்து
ஏக்கத்துடன்
கேட்கின்றது....
"இன்னுமா உன் காதல்
கைகூடவில்லை..?
உன் காதலுக்காய்
உயிரைவிடும்
கடைசி ரோஜா
நானாக இருக்கட்டும் என்று"
++++++++++++++++++++++
"பிடித்திருந்தா ஓட்டுப்போடுங்க"
அன்பின் நண்பன்,
நா.நிரோஷ்