Posts

Showing posts with the label முட்கள்

எல்லாம் மாறிப்போயின....!!!

Image
உன் கண்கள் காணாத என் கண்கள் எதையும் காட்சிப்படுத்தவில்லை எனக்கு....! உன் திசையறியாத என் கால்கள் முடமாகி முடங்கிக் கிடக்கின்றன....! உன் பெயரில்லா என் கவிதைகள் பொருள்தேடி புலம்பி அலைகின்றன...! வாடிய பூக்களில் வசந்தம் கண்ட கைகள் மலரும் பூக்களை மரணிக்கச்செய்கின்றன...! எல்லாம் மாறிப்போயின எனக்கு என்னவள் எனைவிட்டுப் பிரிந்து போனதால்...! ஆனால் இன்னும் இதயம் அவள் பெயர் சொல்லியே இயங்கிக்கொண்டிருக்கின்றது....!!! "நீங்கள் போடுக்கின்ற ஓட்டுகளில் பூப்பதர்க்காய் காத்திருக்கிறது எனது அடுத்த கவிதை" அன்புடன், நா.நிரோஷ்.