Posts

Showing posts with the label தமிழ்

உன் ஹன்ட்பெக்கினுள் பூக்கள் உறங்குகின்றன...!

Image
அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் வணக்கங்கள்.... ஆறு மாதங்களாக வலைப்பக்கம் வரவில்லை, வேலைப்பளுவும் அதனோடு தொடர்புடைய மாற்றங்களுமே காரணம். ஆனால் தாங்கள் எல்லோருடைய பதிவுகளையும் நேரம் கிடைக்கும்போது வாசித்திருந்தேன். நான் தற்பொழுதுதான் டுவிட்டர் கணக்கு ஆரம்பித்திருக்கிறேன். ஆதலால் அதில் இட்ட சில ட்விட்டர் கீச்சுக்கள் மூலம் மீண்டும் தொடர எண்ணியுள்ளேன் எனவே வழமைபோல உங்கள் ஆதரவுகளை தந்துதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். பேய்கண்ட நாயாய் ஓடித்திரிந்தேன் , துரத்தி எறிந்தாய் உன் கல்நெஞ்சம் கொண்டு , நோய்கொண்ட சேயாய் வார்த்தையின்றி அழுகிறது நெஞ்சம் காதல் கொண்டு.! --------------------------------------------------------------------------------------------------------- என்னுள்ளே இதயவீடு இருந்தாலும் வாடகை கொடுத்துதான் நானும் வசிக்கிறேன் # காலக்கொடுமை. --------------------------------------------------------------------------------------------------------- அவனவனுக்கு அவனவன் பிரச்சனை , இங்கு ஒருத்தர் அவரைக்காய் அவியவில்லை என்று கடைக்காரனை பொரித்துக்கொண்டிருக்கிறார் # புதினம் பார்த்தது. ----...

என் விழியும் தமிழ் மொழியும் விற்பனைக்கு...!

Image
எ ன் விழிகள் விற்பனைக்கு என் இதயத்தோடு தொடர்பில் இருந்து என்றும் உனைக்காண ஏங்கித்துடிக்கின்றது ஆதலால் என் விழிகள் விற்பனைக்கு...!!! ************************** எ ன் மொழிகள் விற்பனைக்கு நான் ஒரு கோழை என்னால் பேசப்படுவதால் என்றும் அடிமையாகவே உயிர்வாழ்கிறது அதற்கு நிரந்தர விடுதலை வேண்டும் வீரநெஞ்சம் கொண்டவர்களுக்காய் என் மொழிகள் விற்பனைக்கு...!!! ******************* எ ன் யன்னல் நிலவு விற்பனைக்கு தோழியாய் நினைத்து காதல் செய்திபேச காதலி யாருமில்லை காத்திருக்கும் நிலவும் தேய்ந்துபோவது நியாயமில்லை ஆதலால் என் யன்னல் நிலவு விற்பனைக்கு...!!! ************************ எ ன் ஆண்மை விற்பனைக்கு உயிர்தந்த உறவுக்கும் உயிர்கொடுக்கும் உறவுக்கும் உடன்பிறந்த உறவுக்கும் உடன்பிறவா உறவுக்கும் ஒன்றும் செய்திருக்கவில்லை ஆகவே என் ஆண்மை விற்பனைக்கு...!!! ************************ எ ன் முற்றத்து மல்லிகை விற்பனைக்கு முகர்ந்து பார்த்திடவும் மூச்சின்றி தவிக்கின்றேன் முன்பனியில் நனைந்தும் சுடும்வெயிலில் வாடியும் வ...

கண்கள் சொல்லும் கவிதை...!

Image
கவிதை சொல்லும் கண்களே என் கவிதைக்கு கருவாகின்றன...! தமிழ் சொல்லும் கவிதை தாய்மொழி சொல்லும் கவிதை எல்லாம் தோற்கின்றன உன் விழி சொல்லும் கவிதையில்...!!! ஐயோ....!!! இனி நீ தூங்கும் வேளையில் துவண்டுவிடுமே என் கவிதையும்...! விழித்திரு... கவிதை கொடுத்திரு... காலமுள்ளவரை உன் விழிசொல்லும் கவிதையை திருடியபடி என் மொழிசொல்லும் கவிதையும்...!!! நட்புடன், நா.நிரோஷ்.

வாழ்வின் அழகிய தருணங்கள் அனுபவிப்போம் வாங்க..!

Image
வணக்கம் வணக்கம் வணக்கம்...! என்ன நண்பர்களே இவ்வளவு சோர்ந்து போய் இருகிங்க...? என்னுடைய பதிவுகளை படித்து வந்துமா உங்களுக்கு இந்த நிலமை... (டேய் கடுப்பேத்தாம விளக்கத்த சொல்லுடா). என்ன வாழ்க்கைடா இது அப்படி சொல்ல தோணுதா? பேசமா சாகணும் போல இருக்கு அப்படின்னு தோணுதா...? அப்படின்னா கண்டிப்பா இந்த பதிவ படிங்க. என்னதான் நாம் கடும் பிசியாக இயங்கிக்கொண்டிருந்தாலும் இடைஇடையே நமக்கு சற்று ஆறுதல் தேவைப்படுகிறது. அந்த நேரமாவது நாம் நம் வாழ்வின் அழகிய தருணங்களை உணர்ந்து கொள்ளலாமே. அது ஒன்றும் பெரிய விடயம் இல்லைங்க. ரொம்ப இலகுவானது இயல்பானது. எத்தனையோ பேர் எனக்கு நிம்மதி இல்ல நிம்மதி இல்ல என்று சொல்லக்கேட்டிருப்போம். ஆனால் நிச்சயம் அவர்களால் வாழ்க்கையை அனுபவிக்கக் முடியும் அதற்காக அவர்கள் எந்தவிதமான போதனையோ, தியானமோ, கடவுளை நாடியோ செல்லவேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய நடைமுறை வாழ்க்கையை நாம் அழகாக மாற்றுதல் மூலம் அனைத்துவிதமான வாழ்வின் அழகிய தருணங்களை நான் உணர்ந்துகொள்ள முடியும். அதற்க்கு நான் தரும் இந்த தருணங்களை பாருங்கள், ஒருவேளை இதைப் படித்தவுடன் என்னடா இது சின்னபுள்ள தனமாக இருக்கு என தோன்றலாம். ஆன...

கிளிகள் உன் விழிகள் மொழிகள்...!

Image
கி ளிகள் உன் விழிகள் பேசுகின்ற அழகினை சிறப்பித்துக்கூற என்குதேடியும் கிடைக்கவில்லையே... என் கவிதைக்கான மொழிகள்...!!! ********************************* எ ன்னைப்போல என் வீட்டு ரோஜாவும் ஏமாற துடிக்கின்றது... அவள் கூந்தல் போலி என்று அறியாமல்...!!! ********************************* க ல்நெஞ்சம் கொண்ட உன் காதலுக்கு நான் காத்திருப்பதனால்... இப்போதே கல்லும் மலரும் காத்திருக்கின்றன என் கல்லறைக்காய்..!!! ********************************* நட்புடன், நா.நிரோஷ்.

புத்த மொழி விழியாளே..!

Image
கொ ல்லாமை எனும் கொள்கை கொண்ட புத்தமொழி விழியாளே...! எனை நித்தம் கொன்று குவிப்பதேன்... ? கூரிய உன் விழியாலே... ??? அரபிமொழி போல அறியாமல் முழிக்கின்றேன்... அமுதமொழி தமிழ்மொழியாய் அரவணைக்க வருவாயா... ? இல்லை , ஆப்பு தந்தே செல்வாயா.... ??? நட்புடன், நா.நிரோஷ்.