என் FACEBOOK மொக்கைகள் - II

நவீன சந்தையில் நன்றாகத்தான் விலைபோகின்றது நட்பும் காதலும்...! நானும் நன்றாகத்தான் விதைத்து வைத்திருக்கிறேன்... யாரவது வாங்க முன்வந்தால் நல்ல விலைக்கு தருகிறேன்... FACEBOOK சொல்கிறது...!
*************
மழை நின்ற பின்னே குடை தந்து செல்வாள்....! பல்போன பின்னே பக்கோடா தருவாள்....!
*************
அங்கே வயல்வெளியில் நிம்மதி புதைந்துகிடக்கிறது.... இங்கே பாலைவனத்தில் தேடிக்கொண்டிருக்கிறேன்...!!!
*************
*************
"முன்னே நிற்கின்றேன் வார்த்தை மொட்டுகிறாய்... மொபைலில் மட்டும் SMS ஆக கொட்டுகிறாய்" *************
இஷ்டம் இல்லாக்காதலில் துஷ்டனாய் நான்.... சாதுவாய் வந்து சாந்தம் தந்தாய்... இப்போதெல்லாம் ஒரே நாமம் காதலே சாந்தி சாந்தி என்று...!!!
*************
மழைகாலத்தில் அவிக்கப்பட்ட மரவள்ளி கிழங்காய், வெயில்காலத்தில் வெடிக்கப்பட்ட வெள்ளரி பழமாய்.... என்றும் என்மனது எங்கள் ஊர் மண்வாசத்துடன்....!
*************
முட்கம்பிகளுக்குள் நிலா, முடிந்தவரை போராடினேன் மீட்பதற்கு, கைதொட்டு காப்பாற்றும் தூரம் சென்றபின்.... நிலா சொல்கிறது... உன் கைகளில் ரத்தக்காயம்......