என் விழியும் தமிழ் மொழியும் விற்பனைக்கு...!

எ ன் விழிகள் விற்பனைக்கு என் இதயத்தோடு தொடர்பில் இருந்து என்றும் உனைக்காண ஏங்கித்துடிக்கின்றது ஆதலால் என் விழிகள் விற்பனைக்கு...!!! ************************** எ ன் மொழிகள் விற்பனைக்கு நான் ஒரு கோழை என்னால் பேசப்படுவதால் என்றும் அடிமையாகவே உயிர்வாழ்கிறது அதற்கு நிரந்தர விடுதலை வேண்டும் வீரநெஞ்சம் கொண்டவர்களுக்காய் என் மொழிகள் விற்பனைக்கு...!!! ******************* எ ன் யன்னல் நிலவு விற்பனைக்கு தோழியாய் நினைத்து காதல் செய்திபேச காதலி யாருமில்லை காத்திருக்கும் நிலவும் தேய்ந்துபோவது நியாயமில்லை ஆதலால் என் யன்னல் நிலவு விற்பனைக்கு...!!! ************************ எ ன் ஆண்மை விற்பனைக்கு உயிர்தந்த உறவுக்கும் உயிர்கொடுக்கும் உறவுக்கும் உடன்பிறந்த உறவுக்கும் உடன்பிறவா உறவுக்கும் ஒன்றும் செய்திருக்கவில்லை ஆகவே என் ஆண்மை விற்பனைக்கு...!!! ************************ எ ன் முற்றத்து மல்லிகை விற்பனைக்கு முகர்ந்து பார்த்திடவும் மூச்சின்றி தவிக்கின்றேன் முன்பனியில் நனைந்தும் சுடும்வெயிலில் வாடியும் வ...