Posts

Showing posts with the label தனிமை

உன் நினைவால் கருவுற்றேன்...!

Image
கா தல் வரம் கிடைத்தும் இன்னும் தனிமையில் தவம் கிடக்கிறேன் உனை கரம பிடிக்கும்வரை....!!! நீ கவிதைகள் எழுதியே காலம் கடத்துகிறாய்....! நான் கனவு கண்டே நாட்களை நகர்த்துகிறேன்...!!! இனிமையும் கொடுமையும் இஷ்டம்போல் விளையாடும் தனிமையில்.... என்ன கஷ்டம வந்தாலும் உன் நினைவுகளால் கருவுற்ற காதல் குழந்தையை சுமந்தபடி என் காத்திருப்பு தொடர்கிறது...!!! ************************************** அன்பின் நண்பர்களே தங்கள் வாக்குகளை வீசி விடுங்கள் என் கவிதைகள் கண்டுகொள்ளும்.... நட்புடன், ந.நிரோஷ் .

இனி விடியும் நல்ல பொழுது....!

Image
காதலி நிலவிற்கு...! உனைநித்தம் நினைத்து நிழலாய் போன நிஜக்காதலன் எழுதிக்கொள்வது...! இது நானாக எழுதும்கவிதை அல்ல, உன்முகம் அழகென்ற அனுதினமும் அலட்டிக்கொண்ட என் இரு கண்களும் எனைஇரங்கி வேண்டியதால் இந்த இறுதி மடல்.....! நீயொரு அதிசய மலரென்று - உனைநித்தம் நினைத்து நாள்தொறும் ஆயிரம்கவிதைகள் கிறுகியஎன் கைவிரல்கள் எனை கைதொழுது வேண்டியதால் இந்த இறுதி மடல்...! காரணம் என்னவோ நானறியேன் கண்மணி நீ எனைவெறுத்ததற்கு....? ஆதலால் தினமும் துடிக்கின்றேன் நித்தம் உனைமறப்பதற்கு...! சுகமான உன் கனவில் தொலைந்துபோன என்உறக்கங்கள் இன்றுவலியான கண்ணீரில்மூழ்கி தத்தளிக்கின்றன..! உண்ணும் உணவன்றி வேறொன்றும் தொடவில்லையடி என் உள்ளத்தை உன்நினைப் போன்றைத்தவிர....! ஏனோ இன்று உண்ணும் உணவும் என் உள்ளத்தை தொடமறுக்கின்றது உன் உள்ளத்தைப்போல...! உன்முதல் சந்திப்பிலே மீண்டும் பிறந்தேன் முழுவதும் மறந்தேன் முகிலோடு பறந்தேன் முற்றும் துறந்தேன் இன்று முதல் முறை இறந்தேன்...! என்னுயிர் நீ எனைவிட்டு போனபின்பும் உயிரான காதலை உதறித்தள்ளி எறிந்தபின்பும் உன்நினைவு தேடி என்உள்ளம் பறப்பதுஞாயம்தானோ? நிலவென்று உனைஉரைத்ததற்கு...

மஞ்சள் வெயிலாய்....!

Image
என்றும் சொல்லாமல் தாக்கும் சுனாமியே...! ஒன்றும் சொல்லாமல் கொல்லும் சுந்தரியே...! என்கனவில் வெண்பனியாய் பொழிகின்றாயே...! விழித்தெழும்முன் முன்பனியாய் கரைகின்றாயே...! என்விழிமீது ஒளிக்கீற்றாய் பறக்கின்றாயே...! என்மொழிமீது கவிக்கூற்றாய் பிறக்கின்றாயே...! ஆனால், நீயோ.... இன்னும் மொழியின்றி மௌனமாய் தவிக்கின்றாயே...!!! மஞ்சள் வெயிலாய் கன்னம் சிவந்த முகிலாய் முன்னே வர முனைகின்றாயே...! விரைவில், வெயில் கண்ட நிழலாய் மறைகின்றாயே...! வந்துசெல்லும் அலையாய் வந்து வந்து செல்கின்றாயே....! எபோதும் சிலையாய் என்முன்னே நிற்க்கின்றாயே..!!! "நண்பர்களே உங்கள் ஓட்டுக்களில் பூக்க காத்திருக்கிறது என் கவிதைகள்" நட்புடன், நா.நிரோஷ்

நான் ஏன் இப்படி....?

Image
நான் ஏன் இப்படி....? எனக்குள் ஏன் இந்த மாற்றம்...? நான்கைந்து போத்தல் உள்ளேவிட்ட நண்பன்கூட இப்படி உளறியதில்லை...! ஓசை ஒன்றும் இல்லாமல் ஒரே இசையாய் இசைக்கின்றது என்மனது...! ஆசைகள் பல இருந்தும் அனைத்தும் பூர்த்திகண்டு பூரிக்கின்றது என்மனது...! நாவிற்கு ருசியாய் நல்ல சாப்பாடு ஆனால் பசி அறியவில்லை....! அலுப்பாயிருந்தும் அன்னைமடியிருந்தும் உறங்கமுடியவில்லை...! நண்பர்கள் அடிக்கின்ற அரட்டை கேட்டு கொட்டாவி விடதோணுகிறது...! அம்மா எனை அழைக்கும் போதும் அவள் குரலே கேட்கின்றது....! எறும்பு கடித்த காயமும இல்லை என்னுடலில் ஏன் இப்படி வலிக்கின்றது...! என்பெயரில் ஒரு கவிதை கருத்தரிக்கின்றது அவள் தினமும் உச்சரிக்கும்போது...! எச்சரித்து நின்ற எதிரிகள் எல்லாம் எனைவந்து முத்தமிட முனைகிறார்கள்...! கடும்மழை சுடும்வெயில் கொட்டும்பணி குளிர்காற்று எல்லாம் ஒரேநேரத்தில் என்வானிலையில்..! பாதையோர பனைகளிலும் பளிங்கில் செய்த இலைகளிலும் ரோஜா மலர்கிறது....! கடவுச்சீட்டு இல்லாமலும் கடல்கடந்து செல்லாமலும் உலகம் சுற்றுகிறது மனது...! அறிந்திராத சொந்தமொன...

காதல் குருடன்....!

Image
வெளிச்சம் நிறைந்த பகலில் வெண்ணிலா எப்படி வரும்...? நான் மூடனா...? இல்லை குருடன்...! காதல் குருடன்...! அதனால்தான் என் காதல் வெண்ணிலவை பகலிலும் தேடுகின்றேன்...!!! ++++++++++++++++++++++++++ உன்னோடு நானிருந்த கணங்கலேல்லாம்... பிணங்களாய் ஆனபின்பு, உன்கரம் பற்றித்திரிந்த என் கைகள், கிறுக்குப் பிடித்தபடி ஏதோ கிறுக்கி அலைகின்றது....! என் தனிமையின் தவிப்புகளை கவிதையாய் மாற்றியபடி....!!! "உங்கள் நட்பின் ஓட்டுக்களால் என் கவிதைகள் மேலும் பூக்கட்டும்" நட்புடன், நா.நிரோஷ்.