Posts

Showing posts with the label கருத்து

சுடச்சுட சுட்ட பாடல்...! (Money Money Money... Ummah..!)

Image
சுடச்சுட சுட்ட பாடல் சுகம்தரும் நல்ல பாடல்...! பணத்திற்காய் இட்ட பாடல் படத்தினில் இல்லாத பாடல் கேட்காத ஊரும் இல்ல பாடாத வாயும் இல்ல...! சுடச்சுட சுட்ட பாடல் சுகம்தரும் நல்ல பாடல்...! பசிவந்தா பத்தும் பறக்கும் பணம்வந்தா பசியும் பறக்கும் கசிந்திடும் காதல் கூட காசு இல்லைன்னா காலியாகும் போலியான உறவுகூட வேலியாக மாறி நிற்கும்...!!! சுடச்சுட சுட்ட பாடல் சுகம்தரும் நல்ல பாடல்...! சாந்தம்கொண்ட சாமியாரும் காசுகண்டால் வாய்பிளக்கும் கல்லானா கடவுள்கூட காசுக்காக கல்லுடைக்கும் கற்புகள் கூட இங்கு காசுக்காய் விலை பறக்கும்...!!! சுடச்சுட சுட்ட பாடல் சுகம்தரும் நல்ல பாடல்...! காசுக்காய் கல்யாணம் பணத்திற்காய் படுக்கையறை பிணம்கூட பணமென்றால் நடந்திங்கு வந்திடுமே பிணந்தின்னும் கழுகுபோல மனித மனந்தின்னும் காசு இங்கே....!!! சுடச்சுட சுட்ட பாடல் சுகம்தரும் நல்ல பாடல்...! மகத்தான மனிதமனம் பணத்தாலே மிருககுணம் குணத்தாலே உய்த்த இனம் பணத்தாலே அழியுது தினம் பண்டமாற்று சாதனம் உலகை படைப்பதுதான் வேதனை...!!! சுடச்சுட சுட்ட பாடல் சுகம்தரும் நல்ல பாடல்....!! ! நண்பர்களே பாடல் பிடித்திருந்தா கருத்தும் வாக்கும் இலவசமா ப...