Posts

Showing posts with the label புன்னகை

விண்ணைத்தாண்டி வருவாயா...?

Image
என் இதயம் எப்போது உன் பெயர் சொல்லி இயங்க ஆரம்பித்ததோ.... அப்போதுதான் அதற்க்கு கோளாறும் ஆரம்பித்திருக்கிறது....!!! ++++++++++++++++++++++++ எல்லாக் கவிஞனின் எழுத்தில் இருக்கும் வெண்ணிலவே....!!! என்னவளின் விழி பேசும் மொழியின் அர்த்தம் புரியவில்லை....!!! விடிந்திருந்தும் நீயும் இன்னும் மறையவில்லை....!!! என்னிலை என்னவென்று பார்த்தாயா... எனக்காய் கொஞ்சம் விண்தாண்டி வருவாயா..? ++++++++++++++++++++++++ புன்னகைக்கு பொருள்தரும் உன் உதட்டில் இருந்து, உன் மௌனத்திர்க்கான பொருள் வரும்வரைக்கும்.... என் இதயம் எரிந்துகொண்டுதான் இருக்கும்....!!! ++++++++++++++++++++++++ காரிருட்டில் கிடந்தாலும் கலர்க்கனவுகள் எனை முத்தமிட்டுச் செல்கின்றன.... முழுமைபெற்ற காதலினால்...!!! ++++++++++++++++++++++++ அன்பின் நண்பர்களே மறக்காம ஓட்டுப்போடுங்க... அன்பின், நா.நிரோஷ்.