Posts

Showing posts with the label அரசியல்

அன்பே காதலி அக்கிலிப்பிக்கிலி....!

Image
நாங்கெல்லாம் KFC அக்காக்கிட்டே கேரளா பிட்டு கேடவங்க.. எங்ககிட்டேவா...!!! ************** ஆதுலர்சாலை - ஆற்றலற்றோருக்கும் ஏழையருக்கும் உண்டியும் உறைவிடமும் அளிக்கும் சாலை ************** அன்பே என்கண்கள் அபட்சணம் இருக்கின்றன உன் லட்சணங்கள் காண்பதற்காய்...! #( அபட்சணம் - நோன்பு , பட்டினி) ************** அடங்காப்பிடாரியாய் அடப்பங்கொடியாய் உன்னினைவுகள் என்னைச்சுற்றி....! ************** யாரும் இல்லாத சந்துல கீச்சுக்கள் கீப் மூவிங் கீப் மூவிங்.... மூச்சுக்காற்று நீயானதால்...!!! ************** அன்பே காதலி ஆனதடி இதயம் அக்கிலிப்பிக்கிலி....! #( அக்கிலிப்பிக்கிலி - குழப்பம்) ************** முகத்திற்கு அலங்கரிப்பும் அகத்திற்கு அகங்கரிப்பும் என்றும் கூடாது...! (அகங்கரிப்பு - செருக்கு) ************** காக்காய்! காக்காய்! பறந்து வா ; கண்ணுக்கு மை கொண்டுவா. காதல்! காதல்! பறந்து வா ; கண்ணுக்கு நீர் கொண்டு வா. ************** சுண்டிவிடப்படுகின்ற ஒற்றை நாணயம் அறிந்திருக்குமோ போட்டிகள் ஓராயிரம் றுபாய்களுக்கு முடிவுசெய்யப்பட்டிருக்கலாம் என்பதை. # IPL # TOSS ******...

விதைத்தவன் எவனோ...?

Image
விதைத்தவன் எவனோ...? வினை அறுத்தவள் எவளோ....? உயிர்கொண்டது தாயின் கருவில் உடல்கிடந்தது தெருவின் மடியில்..! பெற்றெடுத்த உனக்கே எனை பிடிக்கவில்லை என்றால்.... தத்தெடுத்த தெருவில் எனக்கு தாலாட்டு எப்படி கேட்கும்...! கொசுவும் எறும்பும் தடுப்பூசி போடு சின்ன அம்மை பெரிய அம்மை நலமாய் பார்த்து சிக்கன்குனியாவால் சீர்திருத்தப்பட்ட ஆரோக்கியச்சிறுவன் நான் இனி அழுதாலும் பயனில்லை....! என்மீது எல்லாவறையும் போடுகிறார்கள் என்னைத்தவிர எல்லாவற்றையும் பொறுக்கிரார்கள் கசங்கிக்கிடக்கும் காகிதத்தைக் சுமக்கிறார்கள் வாடிக்கிடக்கும் என்முகத்தை வெறுக்கிறார்கள்...! உழைத்து உண்ண உடம்பில் இன்னும் வலுவில்லை... உட்கார்ந்து உணவுண்ண உரிய இடம் கிடைக்கவில்லை.... எச்சில் இலையில் என்வயிறு நிறைகின்றது.... காலத்தின் தாலாட்டில் என்கவலை கரைகின்றது.... உறவுகள் யாருமில்லை உரிமைகொண்டாட..... உள்ளத்தில் யாருமில்லை நானும் கொண்டாட.... உலகத்தில் யாரும் அநாதை இல்லை.... இரு உயிர்கள் இல்லாமல் எவரும் இல்லை... ! "நண்பர்களே நீங்கள் குத்தும் ஓட்டுக்களில் பூக்க காத்திருக்கிறது என் கவிதைகள்" ...