வாழ்வின் அழகிய தருணங்கள் அனுபவிப்போம் வாங்க..!

வணக்கம் வணக்கம் வணக்கம்...! என்ன நண்பர்களே இவ்வளவு சோர்ந்து போய் இருகிங்க...? என்னுடைய பதிவுகளை படித்து வந்துமா உங்களுக்கு இந்த நிலமை... (டேய் கடுப்பேத்தாம விளக்கத்த சொல்லுடா). என்ன வாழ்க்கைடா இது அப்படி சொல்ல தோணுதா? பேசமா சாகணும் போல இருக்கு அப்படின்னு தோணுதா...? அப்படின்னா கண்டிப்பா இந்த பதிவ படிங்க. என்னதான் நாம் கடும் பிசியாக இயங்கிக்கொண்டிருந்தாலும் இடைஇடையே நமக்கு சற்று ஆறுதல் தேவைப்படுகிறது. அந்த நேரமாவது நாம் நம் வாழ்வின் அழகிய தருணங்களை உணர்ந்து கொள்ளலாமே. அது ஒன்றும் பெரிய விடயம் இல்லைங்க. ரொம்ப இலகுவானது இயல்பானது. எத்தனையோ பேர் எனக்கு நிம்மதி இல்ல நிம்மதி இல்ல என்று சொல்லக்கேட்டிருப்போம். ஆனால் நிச்சயம் அவர்களால் வாழ்க்கையை அனுபவிக்கக் முடியும் அதற்காக அவர்கள் எந்தவிதமான போதனையோ, தியானமோ, கடவுளை நாடியோ செல்லவேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய நடைமுறை வாழ்க்கையை நாம் அழகாக மாற்றுதல் மூலம் அனைத்துவிதமான வாழ்வின் அழகிய தருணங்களை நான் உணர்ந்துகொள்ள முடியும். அதற்க்கு நான் தரும் இந்த தருணங்களை பாருங்கள், ஒருவேளை இதைப் படித்தவுடன் என்னடா இது சின்னபுள்ள தனமாக இருக்கு என தோன்றலாம். ஆன...