உன் வைஷ்ணவ கனவுகள்..!


இன்னும் எத்தனை நாள் உறங்கவேண்டும் இப்படி சுடும் கருங்கல்லை தலைக்கு வைத்தபடி...!

**********************

உஷ்ண மணலில் உறங்கிவிடலாம் அன்பே உன் வைஷ்ண கனவுகளில் தவிப்பதைவிட...!

**********************

காதலும் நீயே கவிதையும் நீயே... என்று அன்று நீ கூறும்போது அர்த்தம் புரியவில்லை எனக்கு.... இரண்டிலும் பொய் அதிகம் அதனால்தான் சுவைத்ததோ...!

**********************

செல்லாயி முத்தாயி கண்ணம்மா பொன்னம்மா எல்லோருக்கும் ஒரு செய்தி தெரியுமா? நம்ம நிரோஸ் பயபுள்ள மொட்டைமாடில நிலவ வாடகைக்கு வச்சிருக்கானாம்!


பச்சிளம் குழந்தையாய் அறியாமல் பச்சை வயலாய் பரந்து கிடக்கிறது காதல் என்னுள்....!

**********************

நண்பா கலாய்க்க நீ இன்றி காய்ந்துபோய் கிடக்கிறோம் நானும் பியரும்...:(

**********************

என் இனிய பொன் நிலாவே இன்று நேரத்துடன் மொட்டை மாடி வரவும் அடியேனுக்கு மூடு சரியில்லை மூடி திறக்கவேண்டும் ஓடி வாரும்...!

**********************

அலங்காரம் இல்லாவிடின் அனைத்தும் அலங்கோலம் அன்னையை தவிர....!

**********************

"உன் மௌனத் தாலாட்டில் என் காதல் குழந்தை நன்றாகவே தூங்குகின்றது.! பாவம் !குழந்தை அறியவில்லை போலும்.... இனி கண்விழிக்கவே முடியாதென்பதை...!

**********************

சாலையோர கட்டில் இருந்து சரக்கடித்த நண்பர்கள் சேலை ஒன்றை கண்டதும் ராவா ஒரு ரகமா அடிக்கிறாங்க....!


உன்னைப்பற்றிய யோசனை பலமாக இருக்கும்போதே நினைத்தேன் மொக்கையாகத்தன் என் காதல் சொல்வேன் என்று...!

**********************

உண்மையான நட்பு உணர்ந்தருளல் வேண்டும் நீயும் நானும் நலமுடன் வாழ...!

**********************

மொக்கை மனதிலும் மகிழ்ச்சி சக்கைபோட்டு ஓடும்... காதல் ரெக்கை விரித்து பறந்தால்...!

**********************

என் பயனற்ற மரபணுவும் பாவை உன்பாதம் கண்டால்... புரதம் கொண்டதாய் பூரண குனமடைகின்றது...!

**********************

உன் ஒரு முத்த தூண்டிலூக்காய் என் மொத்த ஜீன்களும் துள்ளிகுதிக்கின்றன....!

**********************

ஒன்றும் வேண்டாமென்று ஒதுங்கி இருந்தாலும் உள்ளத்தில் பதுங்கி இருந்து தாக்குகிறது பாழாப்போன காதல் நினைவுகள்...!

**********************

அழகே உனை எப்படி கவிதையால் முத்தமிட்டாலும் தமிழ் அழகுதான்...!

**********************

நல்லிரவு நெடுஞ்சாலையில் நடந்தபடி செல்கின்றேன் உன்னோடு உள்ளுக்குள் பேசியபடி...... நான் நிழல் நிலா...!

**********************

நிர்வாணமாய் நிலா மேகமுட்களின் இடைநடுவே சிக்கிச்சீரழிந்து சின்னாபின்னமாய் தேய்ந்தபடி...! #நநிகீ

**********************

பாவம் சின்னஞ்சிறார்கள் சுவற்றில் ஒன்னுக்கு அடித்து ஓவியம வரைய முற்பட்டு தோற்றுச்செல்கிறார்கள் இருந்தும் ரசித்தபடியே...:)


நான் போகும் வழியெல்லாம் பூக்கள் போர்தொடுக்கின்றன.. என் சுவாச வளியில் உன் வாசம் கலந்திருப்பதனால்...!

**********************

காரணத்தை பொறுத்துதான் காத்திருப்பின் ரணம் வேறுபடுகின்றது...!

**********************

சிக்கன் கொத்துரொட்டியாய் சிதறிக்கிடக்கிறது நெஞ்சம் உன் கண்கள் வெட்டி...!

**********************

ஆட்டுக்குடி துரத்தி செல்லும் அன்புக்குடியே மீட்டர் வட்டியாய் உன்மீதான காதல் வாட்டிவதைக்குதே.....!!!

**********************

உன் புன்னகையில் பூப்பூக்கும் முன்பல் இரண்டாலும் முன்பின் தெரியாமல் தள்ளாடிப்போனேனே தாவணிப் பெண்ணாலே...:))

**********************

கறையான் சுவைத்த புத்தகமொன்றின் கடைசி பக்கத்தில் உந்தன் பெயர் மட்டும் பத்திரமாக....:))

**********************

செல்வச்செழிப்பின் மணம் நட்பில் அமைந்த மனம்..:))

**********************

ஏனோ திடீரென்று விக்ரமன் படப்பாட்டு கேட்க தோணுது... யாருக்காவது ஏதாவது தியாகம் செய்யபோகிறேனோ..?

**********************

Comments

  1. //அலங்காரம் இல்லாவிடின் அனைத்தும் அலங்கோலம் அன்னையை தவிர....!
    //
    100% சரி ..

    ReplyDelete
  2. நன்றி நண்பா...:))

    ReplyDelete
  3. நன்றிகள் நண்பா..>!

    ReplyDelete
  4. மூச்சு முட்டுது பாஸ் ...ஒரே நேரம் இத்தனையா?கொஞ்சம் கொஞ்சமா போடுங்க நண்பா.எனக்கு பிடித்த நடை இது போல் சிறியதாக நறுக் கவிதைகள்.நேரம் இருந்தால் நம்ம பக்கமும் வாங்க நண்பா...இணைந்திருப்போம்.

    ReplyDelete
  5. நிச்சயமாக நண்பா... என்றும் இணைந்திருக்கிறேன்.. நன்றிகள் வந்தமைக்கு..:))

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.