நடுநிசி நாயும் நானும்...! (கவிதை)

நிலா முகில் எழில்
தென்னோலை தென்றல் மெல்லிசை
நடுநிசி நாய்க்கூட்ட ஊளை
அத்தனையும் அழகாய் அரங்கேறும்
இரவுநேர இன்பப்பொழுதில்
ஏன் என் உறக்கம் மட்டும்
துன்பப் போர்வைக்குள்
துவண்டுகிடக்கின்றது...?
****
நனவுகளின் வலி அதிகரித்து
கண்கள் கடிகார முட்களோடு
குங்க்பு சண்டையிடுகின்றன...
எங்கு தேடியும் கிடைக்காத
பொருளில் தமிழில்
கைகள் கவிதை எழுத துடிக்கின்றன...
****
விளங்கவும் முடியாமல்
விளக்கவும் முடியாமல்
விரல்கள் விளக்கை
ஏற்றியும் அணைத்தும்
விளையாடி மகிழ்கின்றன...
****
சுவற்றுப் பல்லியும்
சுற்றிமுற்றி பார்த்துவிட்டு
என்னிடம் வால் காட்டுகின்றது...
என்னிலமை இந்நிலைமை
பெண்ணிலமை கண்டு
பேதலித்ததால் வந்ததோ....
ஒரு சொல் சுட்டு
என்வாழ்க்கை வெந்ததோ....!!!
****
என்றும் நட்புடன் நா.நிரோஷ்
நல்ல கவிதை தொடருங்கள் உறவே.....
ReplyDeleteநிலவு ஒளியாய்
ReplyDeleteகுளிர்விக்கிறது கவிதை..
நன்றிகள் சிட்டுக்குருவி, மகேந்திரன் அவர்களே தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும்....."))
ReplyDelete