பல்லு இருக்கிறவங்க எல்லோரும் பவர்ஸ்டார் ஆக முடியாது..!
பல்லு இல்லாதவங்க எல்லாம் பக்கோடா சாப்பிட முடியாது... பல்லு இருக்கிறவங்க எல்லாம் பவர்ஸ்டார் ஆக முடியாது..!
கண்ணீர் துடைக்கும் கைகளுக்கு தங்கஆபரணங்கள் தேவையில்லை, அவை என்றும் மதிக்கப்பட வேண்டியவைதான்...!
****
பூங்காற்று திரும்புமா பாடல் கேட்கிறேன் பாலைவனப் புளுதிக்காற்றில் நின்றபடி...!
****
மொக்கைகள் முட்டிமோதும் டுவிட்டரில் எட்டியிருந்து புதினம் பார்கிறேன் என்றாவது நானும் வித்தை காட்டலாம் என்றபடி....!
****
டுவிட்ஸ் பூக்கள் பூக்கும் டுவிட்டர் தோட்டத்தில் அலுவலக ஆணிகள் ஆடுகளாய் அனைத்தையும் நாசப்படுத்துகின்றன.....:(
****
முணுமுணுத்த நாய்க்கு முத்த பிஸ்கட் கொடுத்துவிட்டு ஓட்டின்மீது ஏறி ஒழுகிய மழையாய் உள்நுழைந்தேன் - களவானி
****
கண்ணுக்குள் நூறு நிலவு வேண்டாம் ஒரு நிலவுக்கே இழவு போகுதே...:(
****
ஏதேனும் நுளம்பு வந்து உன் தூக்கம் கலைக்கிறதா.. அது என் கவிதை படித்துவிட்டு வந்திருக்கிறது போலும்...!
****
தூக்கமாத்திரை போட்டும் துயில முடியவில்லை உன் துப்பட்டாவில் சிக்கித்தவிக்கும் என் நினைவுகளால்..!
****
நிலவு வந்து கேட்டால் நான் இல்லையென்று சொல்லுங்கள்.... ஒரே தொல்லையப்பா கவிதைகேட்டு....!

ஆணிகள் அவதரிக்கும் பகல் பொழுதுகளில் அன்பே உன்னினைவே சுத்தியல்....!
வண்டுகள் வந்து வரிசையில் நிற்கின்றது ஒரு புன்னகை சிதறிவிடு பிழைத்துப்போகட்டும் அவைகள்...!
****
இருள் சூழ்ந்த நேரம் கவிதை நிலவுகள் தயார்செய்கிறேன் கண்ணே உன் அருள் வேண்டி....!
****
பஞ்சாயத்தில் பஞ்சு பஞ்சாய் பறக்கிறது நம் காதல், அஞ்சுதமே அடியேன் உன்பின்னால் வந்ததால..!
****
காந்த மைகொண்டு கவிதை எழுதுகின்றேன் உன் இரும்பு மனதில் எளிதில் ஒட்டிக்கொள்ள..!
அழியும் நிலையில் அவதாரங்கள் கடவுள்கள் என்ற ஆதாரங்கள்..:(
****
மலர்கள் தூவிய சாலைகள் எங்கும் மனதில் காதலுடன் நடப்பதால்....!
****
நீ திரும்பி பார்த்து சிரிக்கும் ஒவ்வொரு தடவையும் வேண்டும் என்றும் மனம்
****
தத்தி தாவிச்செல்லும் தாவணிப் பூவே.. ஆணிகள் இன்றி அலுப்பெடுத்த கைகள் உன்னைப்பற்றி கவிதை கிறுக்குதே...!
****
காண கண்கள் இல்லாமல் ஏங்கித்தவிக்கும் என் கவிதைகளுக்கு எப்படி சொல்வேன் இந்நேரம் நீ குறட்டை விட்டு தூங்குவாய் என்று..!
****
கண்ணீர் நெருப்பில் எத்தனை முறை கழுவினாலும் காதல் தங்கம் திரும்ப திரும்ப மின்னுகிறது..!
****
நட்புடன் நா.நிரோஷ்
எப்படி இப்படில்லாம்?தாராளமாய் ரசிக்க சிரிக்க தகுந்த மொக்கைகள்.ஒரே பதிவில் ஓவர் லோடு கொடுக்கிறிங்க.தனி தனி தலைப்பில் இடலாமே...
ReplyDeleteதுணுக்குகள் அனைத்தும் அருமை. உண்மையில் பவர்ஸ்டார் விஜய் டிவிக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.
ReplyDelete//எப்படி இப்படில்லாம்?தாராளமாய் ரசிக்க சிரிக்க தகுந்த மொக்கைகள்.ஒரே பதிவில் ஓவர் லோடு கொடுக்கிறிங்க.தனி தனி தலைப்பில் இடலாமே...//
ReplyDeleteஅப்படியே ஆகட்டும் சதீஷ்... நன்றிகள் வருகைக்கும் கருத்துக்கும்....!
நன்றிகள் பாலா... வருகைக்கு...:))
ReplyDelete