பல்லு இருக்கிறவங்க எல்லோரும் பவர்ஸ்டார் ஆக முடியாது..!

பல்லு இல்லாதவங்க எல்லாம் பக்கோடா சாப்பிட முடியாது... பல்லு இருக்கிறவங்க எல்லாம் பவர்ஸ்டார் ஆக முடியாது..! கண்ணீர் துடைக்கும் கைகளுக்கு தங்கஆபரணங்கள் தேவையில்லை , அவை என்றும் மதிக்கப்பட வேண்டியவைதான்...! **** பூங்காற்று திரும்புமா பாடல் கேட்கிறேன் பாலைவனப் புளுதிக்காற்றில் நின்றபடி...! **** மொக்கைகள் முட்டிமோதும் டுவிட்டரில் எட்டியிருந்து புதினம் பார்கிறேன் என்றாவது நானும் வித்தை காட்டலாம் என்றபடி....! **** டுவிட்ஸ் பூக்கள் பூக்கும் டுவிட்டர் தோட்டத்தில் அலுவலக ஆணிகள் ஆடுகளாய் அனைத்தையும் நாசப்படுத்துகின்றன.....:( **** முணுமுணுத்த நாய்க்கு முத்த பிஸ்கட் கொடுத்துவிட்டு ஓட்டின்மீது ஏறி ஒழுகிய மழையாய் உள்நுழைந்தேன் - களவானி **** கண்ணுக்குள் நூறு நிலவு வேண்டாம் ஒரு நிலவுக்கே இழவு போகுதே...:( **** ஏதேனும் நுளம்பு வந்து உன் தூக்கம் கலைக்கிறதா.. அது என் கவிதை படித்துவிட்டு வந்திருக்கிறது போலும்...! **** தூக்கமாத்திரை போட்டும் துயில முடியவில்லை உன் துப்பட்டாவில் சிக்கித்தவிக்கும் என் நினைவுகளால்..! **** நிலவு வந்து கேட்டால் நான் இல்லையென்று சொல்லுங்கள்.... ஒரே ...