நிலவு சரக்கடிக்க சைட்டீஸ் கேட்கிறது..!

நிலவு சரக்கடிக்க சைட்டீஸ் வேண்டுமாம் கைநீட்டுகிறது ஜன்னல் வழியே அதுதான் காதலை கவிதையாய் பொரித்து கொண்டிருக்கிறேன்..!
****
அழகே உனை ஆராதிக்க நேரமில்லை முடியுமானால் இன்று என்கனவில் வந்துவிடு #வேலைக்குபோகிறேன்.
****
விடுதலை வேண்டி வேண்டுமென்றே தவம புரிகின்ற கண்களுக்கு மீண்டும் உனை காண்பேனென்று எப்படி சொல்வேன்...!
****
இனி குடிக்கமாட்டேன் என்பவனை நம்பலாம் ஆனால் இனி கிரிக்கெட் மேட்சு பாக்கமட்டேன் என்பனை நம்ப முடியாது.. #அவதானிப்பு + கடுப்பு.
****
உன் கால்செருப்பு என்கன்னத்தை முத்தமிட்டபோதுகூட கலங்கியதில்லை நான், இன்று உன் நாய்க்குட்டியின் ஆத்மாக்காய் ஒப்பாரிவைக்கிறேன் #நாய்க்காதல்
****
சிறு காய்ச்சல் வந்து சொல்லிவிட்டு போகிறது அன்னை அருகில் இல்லை என்ற பெரிய குறையை...!
****
எட்டமுடியா உச்சம் நீ... வானை வட்டமிடும் நிலவு நீ... எனை திட்டமிட்டு கொத்திச்செல்லும் காதல் கழுகும் நீ...!
****
காதல் காய்ச்சல் கசக்கிறது வாழ்க்கை உன்விழியால் கொஞ்சம் புளிப்பார்வை பாரேன்....!
****
பப்பரப்பே என நீ விரித்துப்போட்ட உன் கூந்தலுக்குள் சிக்கிச்சீரழிகிறது என் பார்வைகள்...!
****
யாருமில்லா டைம்லைனில் என் கீச்சுக்கள் மட்டும் கூச்சலிடுகின்றன சுதந்திரமாய்....!
****
உனை நினைத்தாவறே இறக்கவேண்டும் அப்போதுதான் எமனுக்கும் புரியும் காதல்வலி..!
****
காலங்களில் எனக்கு கஷ்டகாலம் இஷ்டமாய் காதல் வந்து என்னோடு ஒட்டிக்கொண்டதால்..!
****
எங்கேயோ நீ உறங்குகிறாய் உனக்காய் இங்கு தாலாட்டு பாடுகின்றன என் கவிதைகள்...!
****
வெயில்கால வெள்ளரிப்பழமாய் பிளந்துகிடக்கிறது மனது நீ வந்து தாகம் தணிப்பதர்க்காய்...!
****
நிலாப்பழம் உண்கிறேன் உன்நினைவுகளோடு நான் வேச்சுலர் என்பதனால் #ந.நி.கீ.
****
அமலா பால் விழியாள்... அமுத தமிழ் மொழியாள்... எனை கிழிகிழியென கிழித்தாள்...!
****
மனதோடு மல்லுக்கட்டும் மங்கை உன் நினைவுகளை கவிதை மதுகொடுத்து உறங்கவைக்கிறேன்..! :)
****
கவிதை பிசைந்த கையால் நிலவை விரட்டுகிறேன் நீயிருக்கும் திசைவந்து கொட்டிவிடும் என்பதனால்..!!!
****
காதல் சட்டை கிழிந்து கிடக்கிறது அன்பே உன் விழி ஊசி வேண்டி மௌனமொழி ஊசி வேண்டி...!
****
நட்புடன்.. நா.நிரோஷ்
நிலவு சரக்கடிக்க சைட்டீஸ் வேண்டுமாம் கைநீட்டுகிறது ஜன்னல் வழியே அதுதான் காதலை கவிதையாய் பொரித்து கொண்டிருக்கிறேன்..!
ReplyDelete/////////////////////////////////////
அண்ணன் சரக்கு மாஸ்டரோ? (சமையல்காரரோ? அப்படின்னு கேட்டேனுங்க.....)
நன்றிகள் சுரேஷ்குமார்....:))
ReplyDeleteNirosh! ஓரே சிரிப்பாயிருக்கப்பா வரிகள் முழுதும். நன்றாகவேயுள்ளது. காதலும் கிண்டலுமாய் நல்வாழ்த்து.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
நன்றிகள் அம்மா தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...!
ReplyDeleteநிலாப்பழம், கவிதை மது, புளிப்பார்வை, வெயில்கால வெள்ளரிப்பழமாய் பிளந்துகிடக்கிற மனது.....
ReplyDeleteஇப்படியாய் அழகான வார்த்தைப்பிரயோகங்கள்.... எங்கிருந்து பிடிக்கிறீங்க இப்பிடி வார்த்தைகள....
///பப்பரப்பே என நீ விரித்துப்போட்ட உன் கூந்தலுக்குள் சிக்கிச்சீரழிகிறது என் பார்வைகள்...!/// ஹா... ஹா... கவிதை..... வாழ்த்துக்கள்..... தொடரட்டும்.....!!!!