உன் ஹன்ட்பெக்கினுள் பூக்கள் உறங்குகின்றன...!

அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் வணக்கங்கள்.... ஆறு மாதங்களாக வலைப்பக்கம் வரவில்லை, வேலைப்பளுவும் அதனோடு தொடர்புடைய மாற்றங்களுமே காரணம். ஆனால் தாங்கள் எல்லோருடைய பதிவுகளையும் நேரம் கிடைக்கும்போது வாசித்திருந்தேன். நான் தற்பொழுதுதான் டுவிட்டர் கணக்கு ஆரம்பித்திருக்கிறேன். ஆதலால் அதில் இட்ட சில ட்விட்டர் கீச்சுக்கள் மூலம் மீண்டும் தொடர எண்ணியுள்ளேன் எனவே வழமைபோல உங்கள் ஆதரவுகளை தந்துதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். பேய்கண்ட நாயாய் ஓடித்திரிந்தேன் , துரத்தி எறிந்தாய் உன் கல்நெஞ்சம் கொண்டு , நோய்கொண்ட சேயாய் வார்த்தையின்றி அழுகிறது நெஞ்சம் காதல் கொண்டு.! --------------------------------------------------------------------------------------------------------- என்னுள்ளே இதயவீடு இருந்தாலும் வாடகை கொடுத்துதான் நானும் வசிக்கிறேன் # காலக்கொடுமை. --------------------------------------------------------------------------------------------------------- அவனவனுக்கு அவனவன் பிரச்சனை , இங்கு ஒருத்தர் அவரைக்காய் அவியவில்லை என்று கடைக்காரனை பொரித்துக்கொண்டிருக்கிறார் # புதினம் பார்த்தது. ----...